நம்ம ஊருகாரைங்க பாசகார பயளுங்கனு, எங்க ஊருலரிந்து போன அமைச்சர் நிருபிச்சுடாருங்க, ஆமாங்க சென்னை சேர்ந்த ஒரு குழு டெல்லி -சென்னை ரயில் பிடிக்க தவறி , திரு திருன்னு முழிச்சிட்டு இருந்திருக்காய்ங்க, அப்ப நம்ம அமைச்சர் ஒரு தனி ரயில் பெட்டி ஏற்பாடு பண்ணி வழி அனுப்ச்சு வைத்திருகாருங்க. சில பேரை அவருடன் தங்கவும் வைத்திருகார் டெல்லியில்.
அருவா வெட்டுனாலும் சரி, பாச மலைனாலும் சரி, நம்ம பயலுங்க தாங்க முன்னாடி.
பிரசில் நாட்டை சேர்ந்த ஒருவரை, ஏற் பிரான்ஸ் விமானம் ஏறும் சமயத்தில் ஏற தடை பண்ணிர்காருங்க, காரணம் அவருடைய பாஸ்போர்ட் செல்லுபடி ஆகும் தேதி முடிந்து போயிருக்கு, விமானம் ஏறும் கடைசி நேரத்தில் இப்படி ஆகிருகேனு அவருடைய நண்பர் ஒருத்தர் ரொம்பவே சண்டை போட்டு பாத்திருகார், ஆனால் அவர்க்கு அனுமதி மறுக்க பட்டிருக்கு, சரி நண்பனுக்காக தானும் அந்த பயணத்தை கைவிட்டுருகாருங்க.
உயிர் காப்பான் தோழன் ! அப்படின்னு சொல்றாங்களே அது இது தானோ ?
Shame on you JEMO
8 years ago
No comments:
Post a Comment