Tuesday, May 26, 2009

தமிழ் ஈழம் அரசியல் !!

ஈழ தமிழர் பிரச்சினை, எப்போதுமே தமிழ் மக்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட ஒரு விஷயமகவே இருந்தது. இந்த பிரச்சினைக்காக உண்மையாக சண்டை போட்டவர்கள் , அவர்கள் தேர்ந்தடுத்த முறை, போராட்டம் இதை பத்தி நான் குறைவாக எழுத விரும்பவில்லை, இந்த பிரச்சினை வைத்து சுய லாபம் தேடியவர்கள் பத்தி தான் இந்த பதிவு.
சினிமா இயக்குனர்கள் ...!!!

சீமான், பாரதிராஜா மற்றும் சினிமா துறை மக்கள்.தெரியாமல் தான் கேட்கிறேன், ஈழ தமிழர் , சகோதரர்கள் என்று மார் தட்டி ஆவேசப்படும் இவர்கள், இது வரை அகதிகளாய் வந்து குடியிருக்கும் மக்களுக்கு என்ன பண்ணி இருக்கிறார்கள் ? தமிழ்நாட்டில் நிறைய இடத்துல அகதிகள் முகாம் இருக்கு சார், பத்து பதினஞ்சு வருஷமா மக்கள் அங்கயும் கஷ்ட பட்டுட்டு தான் இருக்காங்க. பாரதிராஜா ஒரு தடவையாவது ஒரு முகாம்முக்காவது போயிருப்பாரா, அங்க இருக்குற குடும்பங்களுக்கு உதவி பண்ணுங்க அப்புறம் ஈழத்தில் இருக்கும் தமிழர்களை பத்தி பேசுங்க கேட்கறோம்.

சரி உதவி செய்ய முடியலைனா, அவர்களை பத்தி படம் எடுத்து காமிங்க, விழிப்புணர்வு ஏற்படுத்துங்க. இந்திய சுதந்திர போராட்டத்தில் மேடை நாடகங்களும், கவிஞர்களும் முக்கிய பங்கு விகிக்கலையா.

சும்மா ஜெயில் உள்ள போயிட்டும் வந்துட்டும் இருந்தார் சீமான், நிறைய செய்திகளில் வந்தார், அவருக்குனு ஒரு கூட்டம் சேர்த்தார், அதை தவிர வேற என்ன சாதிச்சார். இப்போது கூடும் பாராளுமன்றத்தில் ஈழ தமிழர் பிரச்சினைக்காக பேச யாராவது இருக்காங்களா, எனக்கு தெரிந்து ஒருவரும் இல்லை, இதை பத்தி எல்லாம் யோசிக்காத நம்ம இயக்குனர்கள், காங்கிரஸ் தோல்வி அடையனும் என்ற ஒரே குறியில் கதை, திரைகதை, வசனம் எழுதி பிரசாரம் பண்ணினார்கள். வழக்கம் போல படம் ஓடவில்லை.

அரசியல்வாதிகள்..!!!

அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் , ஜெயாவின் திடீர் தனி ஈழம் கோரிக்கை, கலைஞரின் தனி ஈழம் கோரிக்கை.

முதலில் இவர்களை ஈழ தமிழர்களின் பிரதிநிதியாக யார் அறிவிச்சா, ஈழ மக்களா ? இல்லை அங்கு இருக்கும் நடேசன், பத்மநாதன் போன்ற அரசியல் தலைவர்களா, இல்லையே. என்னை கேட்டால் முக்யமான பதிவியில் இருக்கும் இவர்கள் விட்ட அறிக்கைகள் அங்கு இருக்கும் இலங்கை அரசை மேலும் துண்டி இருக்கும், எங்கடா தலைவர்கள் யாரையாவது விட்டு வைத்தா இவர்கள் தமிழ்நாட்டின் உதவியுடம் மறுபடியும் தனி நாடு கேட்டு சண்டை போடுவார்கள் என்று, கைதி செய்ய நினைத்தவர்களை குட சுட்டு கொன்று இருப்பார்கள். போர் முனையில் இருக்கும் சூழ்நிலை தெரியாமல் இவர்கள் எப்படி அறிக்கை விடலாம் ? வெள்ளை கொடி பிடிச்சிட்டு சரண் அடைய முயன்ற தலைவர்களை கொன்றதாக செய்திகள் வந்திருக்கிறதே.

http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6350563.ece

வழக்கமா LTTE தலைவர்கள் யாராவது செத்தால் அவர்களை பத்தி கவிதை ஒன்னு எழுதுவார் நம்ம முதல்வர். தற்போதைய சுழ்நிலையில் அவரால எழுத முடியாது என்றே தோன்றுகிறது , அவர் பாணியில் ஒரு சிறு கவிதை, இந்த கவிதை தமிழ்நாட்டில் இருக்கும் இரு முக்யமனா கட்சிக்கும் பொருந்தும் ....

வீழ்வது தமிழினமாக இருப்பினும் வாழ்வது நமது கட்சியாக இருக்கட்டும்

No comments: