Tuesday, August 26, 2008

தமிழ் பற்று ..

..அடிப்படையாக நான் ஒரு மதுரை காரன் ங்க , அதனால தமிழ் மேல எனக்கு ஒரு தனி பற்று என்னிக்கும் உண்டு. அதான் இந்த ஒரு முயற்சி , தமிழ் போஸ்ட் ...


நான் அபபோது எட்டாவது வகுப்பு படுச்சிட்டு இருந்தேன் அப்பா வுக்கு சென்னை நகராட்சிக்கு வேலை மாற்றுதல் வந்தது, நல்ல பள்ளிக்கூடம் ஒன்றை பார்த்து சேர்த்து விட்டாங்க என்னை, நம்ம சென்னை பசங்க சொல்ல வேண்டும்மா என்ன, ஊர்ல இருந்து ஒரு மாக்கான் வந்துட்டான்னு பார்க்கும் போது எல்லாம் நம்ம ஊரு காரங்க மாதிரி பேசி வெறுப்பு எத்துவாய்ங்க , அதாங்க 'வாய்ங்க' 'போயிங்க' 'அங்கிட்டு ' 'இங்கிட்டு ' நு பேசி பேசி , பசங்க தான் இப்படி என்றால் நம்ம ஸ்கூல் டீச்சர் உம் கொறைச்சல் இல்லை, மதுரை ல இருந்து வந்து என்ன இவ்லோ சேட்டை பண்ற என்று சொல்லி நம்மக்கு எப்போதும் ஒரு எக்ஸ்ட்ரா அடீ விலும் அப்போது தான் தெரிஞ்சது சென்னை வாசிகலுக்கு நம்ம ஊரூ காரைங்க மேல எவ்வளவு பாசம்...


ஸ்கூல் சேர்ந்து கொஞ்ச நாளைக்கு என் சின்ன வயஸூ தமிழ் மாஸ்டர் மேல எனக்கு ரொம்ப கோபம் ங்க , என்னடா நம்மக்கு நிறைய தமிழ் வார்த்தை சொல்லி தரலன்னுதான் வேற என்ன ங்க பண்றது...


இப்படி தாங்க.... ஒரு நாள் கிரிக்கெட் விளையாட போனேன் ஒன்னும் புரியலை , ஒரு ரன் எடுத்தா எல்லாம் கத்துறான் 'போங்கு' 'போங்கு' நு ...அப்போரம் கொஞ்ச நேரம் கழிச்சு இன்னொரு ரன் எடுத்தா எல்லாம் 'காஜூ' 'காஜூ' நு கத்துறான் ....


ஒன்னும் புரியாத நம்ம ஊரு காரன்குளுக்காக, நான் கொஞ்சம் தெளிவா சொல்லி ஆகணும்...

போங்கு - ஏமாத்துறது (நான் ரன் சரியா ஓடலை போல இருக்கு)...
காஜூ - அதாங்க ஒரு ஓவர் ல லாஸ்ட் பால் ரன் எடுத்தா ..காஜூ ...

ஓகே ..ங்க ...கொஞ்சம் கஷ்டமா இருக்கு ..தமிழ் ல ப்லோக் எழுதுறது ....

No comments: