Monday, November 17, 2008

நண்பர் கேள்வி .....

..கொஞ்ச நாட்களாவே தினசரி படித்தால் global slowdown, recession, lay off இந்த மாதிரி செய்திகள் மிகவும் பரிச்சியம். மேலைநாட்டில் சில பிரபலமான கம்பனிகள் இழுத்து மூடப்பட்டன, பல மக்கள் தங்கள் சேமிப்பை எங்கு வைப்பது என்று இப்போ ஒரு பெரிய குழப்பம் ..எனக்கு தெரிஞ்சு கொஞ்ச நாட்கள் தங்கள் தலையணி அடியில் வைப்பது தான் சிறந்தது..இது பத்தாது என்று சொல்லி வைத்தார் போல் எல்லா கம்பனிகளும் தங்கள் வேலை ஆட்கள் குறைப்பை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இந்த மாதிரி ஒரு சுழலில் என் நன்பர் ஒருத்தரை சந்தித்தேன். நண்பர் பெயர் சுப்பிரமணி , அவர் கேட்ட ஒரு கேள்வி என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது.ரொம்ப ஒன்னும் சீரியஸ் மொக்கை இல்லைங்க தொடர்ந்து படித்து பாருங்கள் ....

என்னடா, உனக்கு நீ பார்க்கிற வேலை இல்லை என்றால் வேற என்ன வேலை பார்க்க தெரியும் என்று ஒரு simple கேள்வி ...இவர் என்ன நம்மள கேள்வி கேட்கறது என்று அதை பத்தி ஒன்னும் யோசிக்க வில்லை..ஒரு ரெண்டு நாட்கள் கழித்து அதை பத்தி யோசிச்சு பார்த்தேன். அப்போது தாங்க எனக்கு நான் பண்ண சில வேலைகள் நியாபகம் வந்தது ...

ஒரு ஆறு வருடம் முன்னாடி ...நான் தின கூலி வேலை பார்த்து இருக்கேன் ..என் சொந்தகாரர் மற்றும் நண்பர் ஒருவர், அவரிடம் வேலை பார்க்கும் ஆட்கள் வரவில்லை அன்று ..நமக்கும் கொஞ்சம் ஆர்வம் , அவரிடம் வீட்டில் சொல்லாதீர்கள் நான் இந்த வேலை பண்றேன் ..கூலி மட்டும் சரியா கூடுத்திடனும் என்று ஒரு condition..ஒரு மூன்று நாட்கள் drill work பண்ணேங்க (எவ்லவொ பண்ணிடோம் இதை பண்ண மாட்டோமா.. சார் ! ...) அதற்க்கு மேல் முடியலை ..விட்டா போதும் சாமி என்று ஒடி வந்து விட்டேங்க, கொஞ்ச நாளைக்கு தூங்கும் போது கூட drill sound கேட்கும்ங்க ....

நம்ம superstar மட்டும் தான் கண்டக்டர் வேலை பார்பாரா....நான் கூட கண்டக்டர் வேலை பார்த்து இருக்கேன் ..சேலம் - கரூர் ரூட் தாங்க நம்ம ரூட்...ஒரே ஒரு நாள் தான் வேலை, நண்பர்கள் கூட போன ஒரு டூர் மத்தியில் நான் கொஞ்சம் பார்ட் டைம் வேலை பார்த்தேன் ...ஒன்னும் இல்லை...கரூர் ...கரூர்...கரூர்...என்று bus முன்னாடி நின்னு தொன்ட கிழிய கத்தனும் ...அதுவும் ஒரு நல்ல அனுபவம் தான்..என் கூட வந்த ஒரு கரூர் பையனுக்கு ரொம்ப சங்கடமா போய் விட்டது என்னமோ உண்மை தான், இந்த வேலைக்கு காசு ஒன்னும் வாங்கவில்லை ...


இதற்கு மேல எழுதினால் படிக்கிற கொஞ்ச பேரும் படிப்பதை நிறுத்தி விடுவீர்கள் .நன்றி.

15 comments:

Jegu said...

Sir .. it's not a conductor job.. it's cleaner job and better call yourself as cleaner.

For others,
that Karur boy is myself only.. Ok sam i will give the wage for that. Usually there the cleaner will get 50 rupees per day and i can pay you 50 rupees though you just did that job for a few seconds.

Jegu said...

BTW i forgot to mention one thing.. Some where you are trying to write it in pure Tamil and after that you are switching to your own slang.. and it's really difficult to read when compare to your mokai. I am wondering your mokai might not reach the readers fully as 100%... :-(.. No worries i can understand... I am sure you cannot go to the drilling works now? so what have you decided if you loose your job?

Prabha said...

Sam, Nice one... never knew that u have done so much... Do write more on this.

Subbu said...

Sam, enjoyed ur blog...especially ur words about me....but actually this was the question asked to me and still i cant find an answer to it....

Like you...even i worked as a turner in a steel rolling company at thiruninravur...unfortunately after 3 days the company was laid off in that period itself...enna koduma sir ithu....

so, my fate never allowed me to have a backup job...then i became a owner of a load van...things went on well initially...it was a day where the ruling party conducted "bundh" all over the state and me along with friends went for a travel in the load van...few people interrupted us in the middle of the travel and requested us to drop them at the next stop....

again...my fate was travelling with us...van stopped in the middle because of the empty tank and before it was know to the crowd...i escaped from the spot leaving the driver to manage it...

so this was the history of my backup jobs...so from now on before getting into a backup job think about my backup jobs....

sam...better irrukura velaiyula...do ur database backup job properly...then u can think about backing up ur job....ithu eppadi irrukku

Sammy said...

Subramani.
well ! that is quite an experience you have. many thanks for sharing it here .

Prabha.
thanks, you might as well share your experience here.if any.

Jegu.
""... so what have you decided if you loose your job?"""
read the blog title and caption below..thanks. and your experience if any in Karur ?

Jegu said...

There were four people from our client side has been laid off... Have to think seriously about the Backup job.. May that will be my primary job once i get something...

I never had a experiance as an employee but we used to invest in share when we studied in college..
But even that stock market is in slump..:-(
have to start business .. but don't know the answers for the W&H questions....

Prabha said...

Sam, I dont think I can write about something half as interesting like yours / Subbu's!

Subbu, Nice to know your "backup" stories! Very interesting :)

uthira said...

sam nee en kita than moka poduvenu ninaichen. kadasile elar kitayum idhe moka thana good "yan petra inbam petrathu iv vaiyaham"
ella sam friends kum enoda azhntha anuthapangal

Sammy said...

என்ன உதிரா மாமி சந்தோஷமா இப்போ !!
அக்ரகாரத்துல புரணி பேச யாரும் இல்லையா ???

Thangam said...

Hmmmm Sam mokkai thangaama nan enna patri comments eluren.... Nan appo 3rd std padichukitttu irrunthen.... nalla kal odaikaravanga kudu merparvai parkum vellai... Onnum mudiyathunu intha software tholailuku vanthuten... Planning 2 leave back again.. hope the best and see the rest..

Balan said...

Sam my dad is owning a textiles shop, so y dont u join our shop as a salesman???... I am also an independent business owner... to know about what business i do u can call me at any time....

Subbu said...

என்ன சாமுவேல், நீங்கள் தமிழ் நாட்டின் எல்லை கோட்டை தாண்டிய பிறகு, ப்லாக் எழுதுவதை நிறுத்தி விட்டீர்களா அல்லது இனி மற்றவர்கள் நிம்மதியாய் இருக்க வேண்டும் என்று உறுதி மொழி எடுத்து விட்டீர்களா? மும்பைக்கு ஒரு தீவிரவாதமும், சென்னையில் ஒரு மழை காலமும் போல தங்களின் உறுதி மொழியும் எனக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியான ஒரு விஷயம் தான் !

Sammy said...

thangam..supervisor job in a qaurry in 3rd std...must be a record of some sort in your place.

and Balan...i was not exactly asking for something here, just sharing my experience.

Subbu said...

பயோ டேட்டா ( சற்று பயப்படும் டேட்டா)

பெயர் - சாமுவேல் (தந்தை வீட்டின் பெயர் பலகையில்)

வீட்டில் - இருந்தால் சாம்.... சாமு

பள்ளியில் - வேலு-சாமி (நினைப்போ ஆறு சாமி)

கல்லூரியில்- ஓட்ரா-சாமி (சக மாணவர்களின் நினைப்பு)

வேலையில் - சாம்மி, மேடீ, (டவுட் என்று கேட்டால் ஆகி விடுவார் சுப்ரமணிய சாமி)

தொழில் - மொக்கை போட்டு சாகடிப்பது

உப தொழில் - திருட்டு விசிடயை பார்த்து விட்டு விமர்சனம் பண்ணுவது

பிடித்தது - சளி, இருமல், பைத்தியம்

பிடிக்காதது - புத்திசாலியை

பொழுதுபோக்கு - பத்து நிமிடம் பேசுவது

சமீபத்ய சாதனை - வீட்டை வாடகைக்கு விட்டது

நீண்ட கால சாதனை - வாடகை வீட்டில் இருப்பது

நண்பர்கள் - பத்து நிமிடம் பேசுவதை நம்புவர்கள்

எதிரிகள் - நம்பாதவர்கள்

மறக்க நினைப்பது - சாமுராய் விற்கும் எண்ணத்தை

மறக்க முடியாதது - ஒன்றுமே பண்ணாமல் பெற்ற Ace Award ஐ

Anonymous said...

ஏன்யா இந்த கொல வெறி உனக்கு !!!!!

i like this
மறக்க முடியாதது - ஒன்றுமே பண்ணாமல் பெற்ற Ace Award ஐ


-Sam