Thursday, September 11, 2008

மறந்து போன நியாபகங்கள்....

ஆமாங்க எனக்கு ஒரு வியாதி இருக்கு (நம்ம கஜினி படம் கதாநாயகன் மாதிரி வச்சுகோங்க ...அவருக்கு நிமிஷம்.. எனக்கு வருஷம் ) யாராவது கூட பழகியவர்களை ஒரு ரெண்டு இல்லை மூன்று வருடங்கள் கழித்து பார்த்தால் அவுங்க பேரு மட்டும் நியாபகம் வந்தே தொலைக்காது, இன்னும் ஒரு ஐந்து இல்லை ஆறு வருடங்கள் சென்றால் ஆலே மறந்து விடுகிறது. இப்போது இதை ஏன் சொல்றேன் என்று நீங்கள் நினைக்கலாம், அப்படி நினைத்தால் தொடர்ந்து படிக்கவும்...நினைக்கவில்லை என்றாலும் படிக்கலாம்.


நான் ரொம்ப நாட்களாக வருத்தப்படற ஒரு விஷயம்ங்க இது. மறந்து போன கல்லூரி நண்பர்கள் மற்றும் கல்லூரி நாட்கள். முதல் ஆண்டு முலு கல்லூரியே நமக்கு ஒரு பெரிய நண்பர் கூட்டம் மாதிரி இருந்தது, நான்காவது ஆண்டு படித்து முடிக்கும் போது நண்பர் கூட்டம் ஒரு அளவு சிறிய வட்டம். அந்த நான்கு ஆண்டுகளையும் எங்கவாது ஒரு டையரி மாதிரி எழுதி வைத்திருந்தால் இப்போது படித்து பார்க்க எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அதுவும் முக்யமாக என்னை போல மறதி உள்ளவர்களுக்கு.


கல்லூரி முடிந்து சில நாட்கள் நண்பர்கள் சந்திப்பு மற்றும் ஊர் சுற்றல் தொடர்ந்தது, கொஞ்ச நாட்கலில் இதுவே தொலைபேசி அழைப்பாக மாறி , பிறகு சம்ஸ் (அதாங்க மொபைல் போன்ல மெசேஜ் அனுப்ரது). கால போட்கில் எல்லா தொடர்பும் துண்டிக்க பட்டு , இப்போது வெறும் கல்யாண கட்சிகளில் மட்டும் சந்திக்க நேருகிறது, அதுவும் நான்கு வருடம் சுக துக்கங்களை பகிர்ந்து கிட்டவனிடம் இப்போது வெறும் நான்கு இல்லை ஐந்து நிமிடம் மட்டுமே ..மச்சான் ஆபீஸ்ல ஒரு மீட்டிங் போகணும் ..என்று சொல்லி வைத்தாற்போல் எல்லாரும் சொல்லிவிட்டு பறக்கிறார்கள். கூட படித்த அம்மணிகள் சொல்லவே வேண்டாம் படிக்கும் போதே நம்மவர்களை கண்டு கொள்ளாதவர்கள் இப்போது எந்த பூலோகத்தில் இருக்காங்கனு கூட தெரியவில்லை...எங்கிருந்தாலும் வாழ்க.


ஆனால் பசங்க பாசகார பயலுங்க எந்த கண்டம் விட்டு கண்டம் தாண்டி போனாலும் மெயில் மற்றும் போட்டோ அனுப்பரான் , இதில் சில பேர் அவுங்க தேனிலவு போட்டோ கூட அனுப்சாங்க, தாங்ஸ்டா மச்சான்.....ஆனால் மேலே சொன்ன மாதிரி சில பெயர்களை பார்த்தால், இவன் எப்படி இருந்தான் இவன் கூட நம்ம பண்ண லூட்டிகள் எல்லாம் சட்டுன்னு நியாபகம் வர மாட்டிகிறது..இதில் இன்னும் கொடுமை பள்ளிகூடம் நண்பர்களை பார்த்தால் ஆள் நியாபகம் வரவில்லை... இதற்கு என்ன காரணங்கள் ? ..

மறப்போம் மன்னிப்போம் ! என்று எல்லாரும் சொல்லறாங்க ...ஆனால் நான் இப்போ மறந்ததற்காக மன்னிப்பு கேட்டு கொல்றேன் (நல்ல வேலை விஜயகாந்த் சார் இதை படிக்க வில்லை ) ......

6 comments:

Jegu said...

Gajini Sir,
Yen per Jegu,, Gnabagam irukutha... It's a nice one.. I am thinking for more than month to write a post in Tamil... But till now i couldn't... I will try to write within this weekend,,,, you are triggering me to write.... :-)

Anonymous said...

Yove Machaaaa.... Nan Thangam.... Remember me... Enna Tamil ellam kalakara... Google vitu tholachutan... ninga vida matingiringa.... Hmmmm....

Sammy said...

ஏனுங்கணா தங்கராஜ், படித்ததற்கு நன்றி. வழக்கம் போல திட்டி விட்டீர்கள், மீன்றும் நன்றி ...

ஜெகதீஷ் அவர்களக்கு ...சில விஷயங்கள் தாய்மொழியில் சொன்னால் தான் நன்றாக உள்ளது....தாங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக எழுத தயங்குவது ஏணோ... வேலை பளு அதிகம் என்று மட்டும் சொல்லிவிடதீர்கள் ..

மணிகண்டன் said...

என்ன கலைஞர் மாதிரி தமிழ் எழுதறீங்க ? அவர் சமஸ்க்ருத எழுத்த மட்டும் தான் தூக்கிட்டு தமிழ்ல எழுதுவார்.

ஞா கூட தமிழ் வார்த்தை தாங்க !

Sammy said...

தோழர் மணி அவர்களுக்கு...
தங்களுடைய தமிழ் பற்று புரிகிறது...எனக்கும் எழுதியதை திரும்ப படிக்கும் பொது பிளைகள் புரிகிறது.... நல்ல தமிழ் தெருஞ்சவன் யாராவது படித்தால் நம்மளை கொஞ்சம் கடுமையாக பேசி விடுவார்கள் என்றும் தோன்றுகிறது ..
'.........ஞாபகங்கள்' என்று எழுதி இருக்க வேண்டும் ...

மணிகண்டன் said...

********திரும்ப படிக்கும் பொது பிளைகள் புரிகிறது....

திரும்ப படிங்க.