அது என்னமோ தெரியலங்க எங்க ஊரு மைய படுத்தி ஒரு படம் எடுத்தால், அந்த படம் ஒரு பெரிய ஹிட். உதாரணத்துக்கு 'காதல்' , 'சுப்ரமணியபுரம்', 'சண்டை கோழி'.......????.....மற்றும் பல (வேற ஒன்னும் ஞாபகம் வரலை) இப்போ எதுக்கு இதை பத்தி சொல்றேன் என்று நீங்கள் நினைக்கலாம்.
'வெண்ணிலா கபடி குழு' , உண்மைய சொல்லனும்னா படத்தில் நடித்த actors ஒருத்தர் பேரு கூட தெரியலிங்க இருந்தாலும் படம் கொஞ்சம் வேகமாவே போகிறது, நம்ம ஊர்களில் நடக்கும் திருவிலாவில் ஆரம்பித்து, ஒரு கபடி போட்டியில் முடியும் கதை.
மதுரை மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் எடுத்திருபார்கள் போல இருக்கு, சில பாடல் காட்சிகள் தேனீ மாவட்டத்தின் மிகவும் செழுமையான இடங்களில் எடுத்திருகிறார்கள்.
பெரும்பாலும் மதுரை என்றால் அருவாள் வீச்சு, கொலை, சாதி சண்டை, இதை பத்தி தான் நம்ம படைப்பாளிகள் படம் எடுப்பார்கள், ஆனால் இந்த படம் கொஞ்சம் வித்யாசம்ங்க.
படத்தில் பிடித்த காட்சி பரோட்டா கடை காட்சி தாங்க, மதுரை ஒரு தூங்கா நகரம் என்று பலரும் சொல்வாங்க, அதுக்கு முக்யமான reason பரோட்டா கடைகள் தான், 24 x 7 service.
படத்தில் வரும் கபடி கோச் சிங்கள தமிழ் பேசுகிறார், அவர் பேசும் போது என்னமோ சிங்கள தமிழர் படும் கஷ்டங்கள் கொஞ்சம் நியாபகம் வருது...
Monday, February 9, 2009
கபடி குழு....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment