தமிழ் பதிவுலகில் ரொம்பவும் பிரபலமான ஒரு பதிவுங்க, இது ஒரு சங்கிலி பதிவு, அப்படினா என்னனு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறன், ஆமாம் இதை படிக்கும் நீங்கள் தொடர்ந்து இந்த கேள்வி பதில் எழுத வேண்டும்.... கொஞ்சம் கஷ்டம் தான், முயற்சி பண்ணி பாருங்க, குறிப்பாக கல்யாணம் ஆனவர்கள் ரொம்பவும் பயந்து பயந்து எழுதும் ஒரு பதிவு.
1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?சாமுவேல் இக்னேஷியஸ் ...இதில் ரெண்டாவது பாதியில் வரும் பேர் நான் பிறக்கும் முன்பே போய் சேர்ந்த தாத்தா பேர், சாமுவேல் என்ற பேர் ரொம்பவே பிடித்த பெயருங்க. ஒரே ஒரு சமயம் என் பெயர் பிடிக்காமல் இருந்திருக்குங்க, ஸ்கூல் படிக்கும் போது, ஒரு தமிழ் வாத்தியார் என்னோட பெயரை திருப்பி வேலுசாமி நு பெயர் சுட்டிடார் ..அப்போது
2.கடைசியாக அழுதது எப்போது..? ரொம்ப எளிதாக அழுபவன், பெரும்பாலும் நிறைய சிரிக்கும் போதும் அழுவது உண்டு,.....ஏங்க இதுக்கு டாக்டர் யாரையும் பார்க்கணுமா ? கே டிவி ஆர்த்தி காமெடி ப்ரோக்ராம் கடைசி.ஆங்கில படத்தில் terminal, செண்டிமெண்டல் அழுகை.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா? கையெழுத்து பிடிக்கும்ங்க, ஆனால் இந்த மாதிரி கேள்வி கேட்கும் பொண்டாட்டி சத்யமா பிடிக்காதுங்க.
4.பிடித்த மதிய உணவு??..மீன், மட்டன், சிக்கன் ..ரொம்ப பிடிச்சது மூளை fry. ஆமாங்க நமக்கு அது கொஞ்சம் கம்மி அதான்.
5.நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
உடனே முடியாத காரியம்
6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
அருவி, எழுத முடியாத சில காரணம் இருக்குங்க.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்?? ..டிரஸ் சென்ஸ்..
8.உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்த விஷயம்...பக்தி.
பிடிக்காத விஷயம்..பேசியே அறுவை போடுவது.
9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்.. pass
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்? தனியாக இருப்பதை ரொம்ப விரும்பும் ஒரு ஆள்.my loneliness is my hapiness.தமணா, அசின் இதற்கு விலக்கம்.
11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்? வெள்ளை , மஞ்சள்
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க?..
என்ன கேள்விங்க இது ...ரொம்ப எரிச்சலா இருக்கு, ஒன்னும் கேட்கலைங்க .
13.வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
எங்க மறுபடியும் இவ்லொ எரிச்சல் பண்றீங்க ..
14.பிடித்த மணம்?எங்க ஊரில் மலை சாரலில் வரும் மண் வாசனை ரொம்ப பிடிக்கும்ங்க.
15.நீங்க அழைக்க விரும்பும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்?
ரொம்ப எளிதான கேள்வி ...பிரபா, ஜெக்கு,சுப்பு,தங்கம்
அழைக்க காரணம் ...ரொம்ப சுவராஸ்யமான மனிதர்கள்
பிடித்த விஷயம்..என்னால ரொம்ப கஷ்ட பட்ட ஜீவன்கள்,நன்றாக எழுதுபவர்கள்
16. பிடித்த விளையாட்டு?... டேபிள் டென்னிஸ்
17. கண்ணாடி அணிபவரா? இல்லை.
18.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?... காமெடி, பாமிலி drama ..
19.கடைசியாக பார்த்த படம்?.. transformer அறுவை .hangover comedy
20.பிடித்த பருவ காலம் ?...கேள்வியில் பதில் இருக்கு..வெட்டி ஒபிபிசெராக ஊர் சுற்றிய காலம்,
21.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்? இந்திய அரசியல் சாசனம் ....படிக்கலாம்னு நினைச்சேன்னு சொல்ல வந்தேன் ..கடைசியா படித்தது the week.
22.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?பெரும்பாலும் பின்னால் இருக்கும் படம் தெரியாமல் இருக்கும்ங்க ..கிட்டதட்ட recycle bin மாதிரி தான் அது இருக்கும் .
23.பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்? பிடித்த சத்தம்....பைப் ஆர்கன் ....பிடிக்காத சத்தம்..drums
24. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
எங்கயாவது தொலஞ்சு போனு நேர்லய திட்டிறேன் .
25.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?எவ்ளோ அடிச்சாலும் சும்மாவே இருப்பேங்க ....அட..நிஜமாங்க பள்ளிகூடத்தில் இருந்தே பழக்கம்.
26.உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்..?
நிறைய விஷயம் இருக்கு.உதாரணமா தீவிரவாதம்,மாற்றி அமைக்க போகும் gay சட்டம்.
27. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்? அப்படி யாரும் சாத்தான் இலிங்க ..ஆனால் கொஞ்ச நாளாவே எதை எடுத்தாலும் குறை கண்டுபிடிச்சுடே இருக்கேன்.
28.உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்? ஆல்ப்ஸ் மௌன்டைன் ..ஹி ஹி ..இன்னும் போலிங்க
29.எப்படி இருக்கணும்னு ஆசை ??.. சிரித்து வாழ வேண்டும் ...பிறர் சி...............
31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ??...pass
32. வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க? ...போராட்டம்
Friday, July 10, 2009
கேள்வி பதில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment