Thursday, May 14, 2009

கிரேசி கிரிக்கெட்

எனக்கு அறிமுகமான ஒரு நண்பர் இருக்காருங்க, cricket ல பயங்கர ஈடுபாடு, ஒரு பெரிய மென்பொருள் கம்பெனில வேலை பார்த்தாலும்., நேரம் கிடைத்தால் அவுங்க ஊரில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்வாருனு கேள்விப்பட்டிருக்கேன், அதுவும் கல்யாணம் ஆன புது மாப்பிளையாக இருக்கும் போது. இவர் ஒரு ex-professional அம்பயரும் கூட, சமீபத்தில் அவருடைய ஒரு பதிவு படிக்க நேர்ந்ததுங்க..

.. http://thodar.blogspot.com/2009/05/11-odi.html

அவரிடம் பண்ண ஒரு சின்ன வாக்குவாதம் தாங்க இந்த பதிவிற்கான காரணம். இந்திய கிரிக்கெட் வரலாற்றில், ரசிகர்கள் மிகவும் கொண்டாடிய அல்லது நியாபகம் வைத்துள்ள வெற்றிகள் list. நமக்கு கிரிக்கெட் அறிவு ரொம்ப கம்மி, அதுவும் முக்யமாக யாருடைய பெரிய விசிறியும் இல்லை. ..அதனால் இந்த list மற்றவர் பார்வையில் தப்பானதாக இருக்கலாம். கிரிக்கெட் ஆர்வம் இல்லாதவர்கள் இதற்கு மேல் படிக்காமல் இருப்பது நல்லது


1. 1983 வேர்ல்ட் கப் ....

இந்த மேட்ச் பார்கலைங்க, ஆனால் கபில் லார்ட்ஸ் மைதானத்தில் கப் தூக்கிய காட்சி ....background la தேசிய பாடல் போட்டுட்டு அந்த வீடியோ போட்டா, இப்ப குட ஒரு கிரிக்கெட் ரசிகனா அதை பார்த்தா புல்லரிகும்ங்க.

2. T20 வேர்ல்ட் கப்...

பின்னணி ........2007 வருடம் நடந்த வேர்ல்ட் கப் போட்டியில் மரண அடிங்க. bangladesh எவண்டா உருவக்குனானு, இந்திரா காந்தியலாம் திட்டிட்டு இருந்தாய்ங்க நம்ம பசங்க. ...2008 ..ஆள் பேரு தெரியாத ஒரு அணி 2008 south africa t20 வேர்ல்ட் கப் போட்டிக்கு அனுப்ப பட்டது...பல ஜாம் பவான்களை கொண்ட அணிகளை வீழ்த்திய நம்ம ஜூனியர் அணி, இறுதி போட்டியில் பாகிஸ்தான் வீழ்த்தியது. அந்த கடைசி பந்து என் நண்பர் ஒருத்தற்கு 'heart attack' வந்து ...அப்புறம் நம்ம 'அப்பம் சுட்டியா' பிடிச்ச கேட்ச் நால அவர் பிழைத்தார்...

3. கொல்கத்தா டெஸ்ட் மேட்ச் ......

இன்னும் கூட பல அணி தலைவர்கள், எதிர் அணியை 'follow on' பண்ண வைக்லாமா வேணாமானு யோசிக்க வைத்த ஒரு நிகழ்ச்சி....ஆஸ்திரேலியா தனது 'last frontier' பிடிக்க முடியாமல் செய்த மேட்ச்.(அதற்கு அடுத்த series aussies அதை கைப்பற்றினார்கள், அது வேற கதை போங்க ...)

4. natwest trophy..........

பின்னணி ......இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி, ODI இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பை கைப்பற்றியது, flintoff தனது சட்டையை கழற்றி மைதானத்தை ஒரு வளம் வந்தார்.....இதை மறக்காத நம்ம அணி தலைவர், இங்கிலாந்தில் நடந்த போட்டியில் ரெகார்ட் chase பண்ணி வின் பண்ண அடுத்த நிமிடம்....லார்ட்ஸ் பால்கனியில் தனது பழி தீர்த்தார் ..

5. Sharjah ...

வழக்கம்மா இந்தியா நல்லா அடி வாங்கும் ஒரு இடத்தில், சச்சின் ஆஸ்திரேலியா அணியை துவசம் பண்ணி எடுத்துடாருங்க ..சச்சினின் அந்த இந்நிங்க்ச்சை 'desert storm' என்று வர்ணனை காரர்கள் மற்றும் மீடியா சொல்வார்கள்..


சரிங்க, இதை படிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள், அவர்களுடைய list அல்லது opinion எழுதினால் நல்லா இருக்கும் ...நன்றி.

No comments: