என்னோட ரொம்ப நெருக்கமான நண்பர்களிடம், இந்த பழமொழிகளை நான் எப்போதும் சொல்வது உண்டு. எனக்கு இதை mansion ல இருந்த ஒரு தமிழ் டீச்சர் சொன்னார், அவர் சொன்ன நிறைய பழமொழிகல் மறந்தாலும், இந்த ரெண்டு பழமொழி மட்டும் நான் மறக்கலங்க .
கப்பலே கவுந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே .........
சாதரணமா யாராவது சோகமா இல்லை கன்னத்தில் கை வச்சுக்கிட்டு இருந்தா சொல்ற பழமொழி இது.
இதற்கு உண்மையான அர்த்தம் என்ன ?
இந்த பழமொழி சொல்லப்பட்ட காலங்களில் ..பெரும்பாலும் 'business' காரர்கள் தங்கள் சரக்குகளை கப்பலில் தான் எடுத்து செல்வார்கள்.
'கன்னம்' என்பதற்கு தமிழ் அர்த்தம் ,திருடர்கள் போடும் ஒரு பெரிய ஓட்டை.
இதன் மூலம் இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம் அறியலாம். உனக்கு தொழிலில் எவ்ளவு பெரிய நஷ்டம் அடைந்தாலும் திருடாதே என்பது தான் இதன் அர்த்தம்..
கப்பலே கவுந்தாலும் 'accountல்' கை வைக்காதே...would be more appropriate for India Inc i think.
பந்திக்கு முந்திக்கோ , படைக்கு பிந்திக்கோ..
ரொம்ப பிரபலமான ஒரு பழமொழி, கல்யான மற்றும் விசேஷ பந்திகளில் முதலில் செல்ல வேண்டும் , சண்டை எதனாச்சு வந்தா பின்னாடி நில்லு ....
இதற்கு உண்மையனா அர்த்தம் கொஞ்சம் புரிய கஷ்டம் , ok let me try. அதாவது நாம சாப்பிடும் போது ..கை எப்படி முகத்துக்கு முன்னாடி கொண்டு வந்து சாபிட்றோமோ ... அதே மாதிரி படை மற்றும் போர்கலில் வில் வீரர்கள் தங்கள் கை நல்லா பின்னாக இழுத்து வில் எய்ய வேண்டும் என்பது தான் இதன் பொருள் .
next time if someone tells you an tamil proverb, remember it does not really mean for what it was said.
Tuesday, January 20, 2009
பழமொழி...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment