Monday, November 17, 2008

நண்பர் கேள்வி .....

..கொஞ்ச நாட்களாவே தினசரி படித்தால் global slowdown, recession, lay off இந்த மாதிரி செய்திகள் மிகவும் பரிச்சியம். மேலைநாட்டில் சில பிரபலமான கம்பனிகள் இழுத்து மூடப்பட்டன, பல மக்கள் தங்கள் சேமிப்பை எங்கு வைப்பது என்று இப்போ ஒரு பெரிய குழப்பம் ..எனக்கு தெரிஞ்சு கொஞ்ச நாட்கள் தங்கள் தலையணி அடியில் வைப்பது தான் சிறந்தது..இது பத்தாது என்று சொல்லி வைத்தார் போல் எல்லா கம்பனிகளும் தங்கள் வேலை ஆட்கள் குறைப்பை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இந்த மாதிரி ஒரு சுழலில் என் நன்பர் ஒருத்தரை சந்தித்தேன். நண்பர் பெயர் சுப்பிரமணி , அவர் கேட்ட ஒரு கேள்வி என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது.ரொம்ப ஒன்னும் சீரியஸ் மொக்கை இல்லைங்க தொடர்ந்து படித்து பாருங்கள் ....

என்னடா, உனக்கு நீ பார்க்கிற வேலை இல்லை என்றால் வேற என்ன வேலை பார்க்க தெரியும் என்று ஒரு simple கேள்வி ...இவர் என்ன நம்மள கேள்வி கேட்கறது என்று அதை பத்தி ஒன்னும் யோசிக்க வில்லை..ஒரு ரெண்டு நாட்கள் கழித்து அதை பத்தி யோசிச்சு பார்த்தேன். அப்போது தாங்க எனக்கு நான் பண்ண சில வேலைகள் நியாபகம் வந்தது ...

ஒரு ஆறு வருடம் முன்னாடி ...நான் தின கூலி வேலை பார்த்து இருக்கேன் ..என் சொந்தகாரர் மற்றும் நண்பர் ஒருவர், அவரிடம் வேலை பார்க்கும் ஆட்கள் வரவில்லை அன்று ..நமக்கும் கொஞ்சம் ஆர்வம் , அவரிடம் வீட்டில் சொல்லாதீர்கள் நான் இந்த வேலை பண்றேன் ..கூலி மட்டும் சரியா கூடுத்திடனும் என்று ஒரு condition..ஒரு மூன்று நாட்கள் drill work பண்ணேங்க (எவ்லவொ பண்ணிடோம் இதை பண்ண மாட்டோமா.. சார் ! ...) அதற்க்கு மேல் முடியலை ..விட்டா போதும் சாமி என்று ஒடி வந்து விட்டேங்க, கொஞ்ச நாளைக்கு தூங்கும் போது கூட drill sound கேட்கும்ங்க ....

நம்ம superstar மட்டும் தான் கண்டக்டர் வேலை பார்பாரா....நான் கூட கண்டக்டர் வேலை பார்த்து இருக்கேன் ..சேலம் - கரூர் ரூட் தாங்க நம்ம ரூட்...ஒரே ஒரு நாள் தான் வேலை, நண்பர்கள் கூட போன ஒரு டூர் மத்தியில் நான் கொஞ்சம் பார்ட் டைம் வேலை பார்த்தேன் ...ஒன்னும் இல்லை...கரூர் ...கரூர்...கரூர்...என்று bus முன்னாடி நின்னு தொன்ட கிழிய கத்தனும் ...அதுவும் ஒரு நல்ல அனுபவம் தான்..என் கூட வந்த ஒரு கரூர் பையனுக்கு ரொம்ப சங்கடமா போய் விட்டது என்னமோ உண்மை தான், இந்த வேலைக்கு காசு ஒன்னும் வாங்கவில்லை ...


இதற்கு மேல எழுதினால் படிக்கிற கொஞ்ச பேரும் படிப்பதை நிறுத்தி விடுவீர்கள் .நன்றி.

No comments: